/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு விடுதிக்கு தள்ளு வண்டியில் தண்ணீர் எடுக்கும் மாணவர்கள்அரசு விடுதிக்கு தள்ளு வண்டியில் தண்ணீர் எடுக்கும் மாணவர்கள்
அரசு விடுதிக்கு தள்ளு வண்டியில் தண்ணீர் எடுக்கும் மாணவர்கள்
அரசு விடுதிக்கு தள்ளு வண்டியில் தண்ணீர் எடுக்கும் மாணவர்கள்
அரசு விடுதிக்கு தள்ளு வண்டியில் தண்ணீர் எடுக்கும் மாணவர்கள்
ADDED : மார் 28, 2010 04:21 AM
ஆண்டிபட்டி : ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் உள்ளன.
6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் வெளியூர் மாணவர்கள் இந்த விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். விடுதி வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு பழுதான ஆழ்குழாய் மோட் டார் சரிசெய்யப்படவில்லை. விடுதி அருகில் தண்ணீருக்கான மற்ற எந்த வசதியும் இல்லை. இதனால் குடிநீருக்கு மாணவர்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் இல்லாததால் கழிப்பிடம் செல்வவும், குளிக்கவும், துணிகளை துவைக்கவும் முடிவதில்லை.
சமையல் செய்வதற்கான தண்ணீரை விடுதி மாணவர்களைக்கொண்டு ஒரு கி.மீ.,தூரத்தில் உள்ள ஜம்புலிபுத்தூரில் இருந்து கொண்டு வருகின்றனர். தள்ளு வண்டிகளில் பெரிய "டிரம்' களை வைத்து பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து அன்றாடம் தள்ளிக்கொண்டு வருகின்றனர். கடுமையான இந்த வேலையை செய்யும் மாணவர்கள் சோர்ந்து விடுவதால் படிப்பில் கவனம் குறைகிறது. விடுதிக்கு தேவையான தண்ணீர் வசதி செய்து தர பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.